கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தை முன்கூட்டியே இயக்குமாறு வலியுறுத்தி இளைஞர்கள் தகராறு..!
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓட்டுநருடன் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டதன் காரணமாக, 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
போளூருக்கு செல்லும் பேருந்தை முன்கூட்டியே புறப்பட சில இளைஞர்கள் வற்புறுத்தியதாகவும், இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஓட்டுநர், நடத்துனருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
தகராறு செய்த இளைஞர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஓட்டுநர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வெளியூர் செல்லும் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் கோயம்பேட்டில் இருந்து செல்லும் பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிட்டது.
தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 இளைஞர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Comments