ரூ.4,194.66 கோடி மதிப்பீட்டில் 3 மாவட்டங்களில் புதிய குடிநீர் திட்டங்கள்..!
ராமநாதபுரம், திருவள்ளூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 4 ஆயிரத்து 194 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர்
திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன், அம்ருத் 2.0 (டூ பாயிண்ட் ஜீரோ) திட்டம் மற்றும் மூலதன மானிய நிதியின் கீழ் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புது ஏரி கல்வாய், மாமண்டூர் ஏரியின் ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாக கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Comments