உக்ரைன் தலைநகரை தாக்க 2 லட்சம் வீரர்களை தயார் செய்கிறது ரஷ்யா-உக்ரைன் ராணுவ தலைமை தளபதி குற்றச்சாட்டு
உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் தொடுக்க, 2 லட்சம் படை வீரர்களை ரஷ்யா புதிதாக தயார்படுத்திவருவதாக, உக்ரைன் ராணுவ தலைமை தளபதி வலாரி சலூஸ்நி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தாண்டு பிப்ரவரி மாதம், தலைநகர் கீவை நோக்கி முன்னேறி வந்த ரஷ்ய படைகள், உக்ரைனின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல், பின்வாங்கி தொழிற்சாலைகள் நிறைந்த டான்பாஸ் பகுதி நோக்கி தங்கள் கவனத்தை திருப்பின. அடுத்த மாத இறுதியில், மீண்டும் கீவ் நகரை நோக்கி ரஷ்யா படைகள் முன்னேறி வரலாம் என வலாரி சலூஸ்நி தெரிவித்துள்ளார்.
போரில் ஏற்பட்ட பின்னடைவுகளை சரிகட்ட, ரஷ்ய படைகள் உக்ரைனின் மின் கட்டமைப்புகளை சேதப்படுத்தியதால், லட்சக்கணக்கானோர் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல் குளிரில் நடுங்கி வருவதாகவும் உக்ரைன் ராணுவ தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.
Comments