இயற்கை எழில் மிகுந்த படாங்கலி பகுதியில் நிலச்சரிவு - 16 பேர் பலி
மலேசியாவின் சிலாங்கூர் அருகே சுற்றுலா முகாம் ஒன்றில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி, 16 பேர் உயிரிழந்தனர்.
இயற்கை எழில் மிகுந்த படாங் கலி என்னுமிடத்தில், முகாம் வசதிகளுடன் கூடிய இயற்கை பண்ணை அமைந்துள்ளது.
அந்த முகாம்களில் 90க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலச்சரிவு நிகழ்ந்தது.
நிலச்சரிவில் சிக்கிய 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மண்ணுக்குள் புதைந்து மாயமான 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments