தீயணைப்புத்துறை இயக்குனர் டிஜிபி பி.கே.ரவி திடீரென இடமாற்றம்

0 2367

தமிழக தீயணைப்புத் துறை இயக்குனர் பி.கே.ரவி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இயக்குனரான சீமா அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறையின் இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த பிரஜ் கிஷோர் ரவி திடீரென அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வேறு பணி ஒதுக்கப்படவில்லை.

மத்திய அயல் பணிகளில் இருந்து வந்த பிரஜ் கிஷோர் ரவி கடந்த 2020-ஆம் ஆண்டு மீண்டும் தமிழக காவல்துறை பணிக்கு திரும்பினார். தீயணைப்புத்துறை இயக்குனராக இருந்து வந்த அவர் திடீரென மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது காவல் துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments