மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி, சைவ-வைணவக் கோவில்களில் தொடங்கியது சிறப்பு வழிபாடுகள்..!
மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி, சைவ-வைணவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன.
தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழி, தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தை தேவர்களுக்கான அதிகாலை நேரமாக புராணங்கள் கூறுவதால், அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, வாசலில் வண்ணக் கோலமிட்டு இறைவழிபாடு செய்து வருகின்றனர்.
மாதங்களின் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். இம்மாதத்தில் கோவில்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இம்மாதத்தில், சுபநிகழ்வுகளை தவிர்த்துவிட்டு, இறைவழிபாட்டுக்கு அதிகநேரம் ஒதுக்குகின்றனர்.
கன்னிப்பெண்கள் தாங்கள் விரும்பும் கணவனை அடைவதற்கு, இம்மாதம் முழுவதும் பாவை நோன்பு இருப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினால் வாழ்வில் எல்லா வளமும் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Comments