பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாக துடிப்புடன் இயங்கி வருகிறது.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
நியுயார்க்கில் நடைபெற்ற ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானில் தீவிரவாதம் முழுவீச்சுடன் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதாக சாடினார்.
தீவிரவாதம் தொடர்பான உலக நாடுகளின் கண்ணோட்டம் மாற வேண்டும் என்றும் ஐநா.வின் அணுகுமுறையிலும் மாற்றம் வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் மீதும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்கள் மீதும் கடுமையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் ஐநாவுக்கு ஜெய்சங்கர் மறைமுகமாக வலியுறுத்தினார்.
Comments