சூழ்நிலை ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் புதிய தீர்ப்பு..!
அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் நேரடி சாட்சியம் இல்லாத போதும் சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் கூட அவர்களை குற்றவாளிகளாக அறிவிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
நல்ல நிர்வாகத்தை ஊழல் பாதிப்பதோடு, நேர்மையான அதிகாரிகள் மீது மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது என்றும் அந்த அமர்வு கூறியுள்ளது.
ஊழல் வழக்கில் அரசு ஊழியர்களுக்கு எதிராக முதன்மை ஆதாரங்கள் இல்லாதிருந்தால் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று 2015ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட இந்த அமர்வின் புதிய உத்தரவினால் இனிமேல் 2015ம் ஆண்டு தீர்ப்பை காரணம் காட்டி அரசு ஊழியர்கள் தப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
Comments