சென்னையில் பலமுறை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு..!
சென்னை போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பலமுறை போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள், எ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு, வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னையில் 11 சந்திப்புகளில் 15 எ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு, தானியங்கி E-challan முறையில் வழக்குப்பதிவு செய்யப்படும் நிலையில், பலமுறை விதிகளை மீறிய 69 வாகன ஓட்டிகளுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு, இன்று போக்குவரத்து காவல்துறையின் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் 35 பேர் பங்கேற்ற நிலையில், 6 பேர் தங்களின் அபராத தொகையை செலுத்தினர்.
Comments