தோல்வியில் அழுத மொராக்கோ வீரருக்கு பிரான்ஸ் வீரர் ஆறுதல்

0 2204

உலக கோப்பை கால்பந்து அரை இறுதியில் தோல்வியடைந்த மொராக்கோ அணியின் வீரர் ஹகிமி கதறி அழுத போது அவரை பிரான்ஸ் வீரர் Kylian Mbappe  கட்டி தழுவி ஆறுதல் கூறியதுடன் நீங்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள் ஹகிமி என ட்வீட் செய்துள்ளார்.

கத்தாரின் AL Bayt மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது.

தோல்வியை தாங்க முடியாத மொராக்கோவின் நட்சத்திர வீரர் அகிராஃப் ஹகிமி கண் கலங்கினார். அப்போது பிரான்ஸ் வீரர் Kylian Mbappe அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

பின்னர் Kylian Mbappe தனது ட்விட்டர் பக்கத்தில் ஹகிமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு,ஆறுதல் கூறியுள்ளார்.

அதில், கவலைப்படாதே சகோதரா, நீங்கள் செய்ததை நினைத்து எல்லோரும் பெருமையடைந்துள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments