கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை - ரஷ்யா

0 2299

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக, ரஷ்யா-உக்ரைன் போர் பார்க்கப்படுகிறது.

போர் தொடங்கி 10 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக, கிறிஸ்துமஸுக்குள் ரஷ்யா படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கான எந்த திட்டமும் இதுவரை இல்லை என, ரஷ்ய அதிபர் அலுவலக செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments