குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கால அவகாசம் - சென்னை நீதிமன்றம்

0 1874

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய, சிபிஐக்கு சென்னை நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

2016ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் மாதவராவ் என்பவரின் கிடங்கில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், லஞ்சம் கொடுக்கப்பட்ட விபரங்கள் அடங்கிய டைரியை கைப்பற்றினர்.

அதனடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது, சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை, சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடையவர்களில் 7 பேருக்கு எதிராக மட்டுமே வழக்கை நடத்த, மத்திய - மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றிருப்பதாக சிபிஐ தெரிவித்தது.

இதனையடுத்து, ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை திருத்தம் செய்தும், விசாரணைக்கு அனுமதி பெறப்பட்டவர்களின் விபரங்களையும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இவ்வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments