மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராத மருத்துவர்கள் 4 பேர், சஸ்பெண்ட்

0 1758

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராத மருத்துவர்கள் 4 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்தபோது, வழியில்
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, எவ்வித தகவலும் அளிக்காமல், உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த மருத்துவர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மருத்துவமனை கோப்புகளை ஆய்வு செய்தபோது, மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர், மதுராந்தகம் மருத்துவமனையை பல மாதங்களாக ஆய்வு செய்யாமல் இருந்தது தெரிய வந்ததால், அவரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டதோடு, 5 பேர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments