7 வயது சிறுவனுக்கு “கூலிப்” கொடுத்த சிறுவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

0 2222

தென்காசி மாவட்டம் நாகல்குளத்தில், ஏழு வயது சிறுவனுக்கு “கூலிப்” எனும் தடைசெய்யப்பட்ட போதை பொருளை கொடுக்கும் வீடியோ, சமூக வலை தளங்களில் பரவிவரும் நிலையில், அதுதொடர்பாக சிறுவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கடந்த 11-ம் தேதி, நாகல்குளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி வேனில் அமர்ந்திர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் 3 பேர், மற்றொரு சிறுவனுக்கு கூலிப் கொடுத்து, அதனை சிறுவன் பயன்படுத்தி பின் போதையில் தள்ளாடும் காட்சியை வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், 3 சிறுவர்கள் மீது வழக்கு பதிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments