நர்சிங் கல்லூரியின் விதிமீறலை சரிசெய்ய ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார்.. தணிக்கைத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!
தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரியிடம் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், மத்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைத்துறை இயக்குனருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரியின் விதிமீறலை சரிசெய்ய தணிக்கைத்துறை இயக்குனர் பரம்சிவன், 35 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற முயன்றதாக பரமசிவனின் உறவினர் சிவராம் திலகரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், பரமசிவனுக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பரமசிவனின் உறவினர் சிவராம் திலகருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
Comments