வெளிநாட்டு குதிரைகளை பண்ணையில் வளர்த்து தருவதாகக் கூறி கேரள பெண்ணிடம் ரூ.2.5 கோடி மோசடி - 3 பேர் கைது!

0 2174

கோயம்புத்தூரில், வெளிநாட்டு குதிரைகளை பண்ணையில் வளர்த்து தருவதாகக் கூறி கேரள பெண்ணிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

துபாயில் வசித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜெயா நாயர் அளித்த புகாரின்படி, பொள்ளாச்சியைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மகன்கள் ஹரிவராசன், அரவிந்த் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்தனர்.

ஜெயா நாயர் பல்வேறு வகையான குதிரைகளை இந்தியாவில் பல இடங்களில் பண்ணை அமைத்து விற்பனை செய்து வரும் நிலையில், குதிரைகளை பராமரித்து தருவதாகக் கூறி 15 வகையான குதிரைகளை பெற்று 4 குதிரைகளை மோசடியாக விற்பனை செய்ததுடன், குதிரையின் பராமரிப்பிற்காக மாதந்தோறும் வழங்கிய பணத்தையும் சுருட்டியது விசாரணையில் தெரியவந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments