கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளைக் குறைத்து, போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான செலவுகளைக் குறைத்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டுமென போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் இருந்து கலந்து கொள்ளும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் உக்ரைனில் போரை நிறுத்த வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் குளிரிலும், பசியிலும் வாடி வருகின்றனர் என்று தெரிவித்த போப், அவர்களது இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் எனக் கூறினார்.
Comments