விதி மீறல் தொடர்பாக ஈஷா யோகா அறக்கட்டளைக்கு எதிரான நோட்டீஸ் ரத்து..!
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக, ஈஷா யோகா அறக்கட்டளைக்கு எதிராக, தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த நோட்டீஸை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி, விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக, ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு, அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக்கோரி, ஈஷா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில், ஈஷா யோகா மையத்தை கல்வி நிறுவனமாக கருதி, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு பெற உரிமை உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மொத்த கட்டுமான பரப்பில், கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால், விலக்கு பெற உரிமை உள்ளதாக கூறி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த நோட்டீசை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
Comments