மகாராஷ்டிராவில் ரூ.3 லட்சம் கோடியில் சாலைப்பணிகள்.. இந்தியாவின் நீளமான சாலையாக நாக்பூர்-கோவா சாலை உருவாக்கம்..!

0 2124

3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், மகாராஷ்டிராவிலுள்ள 36 மாவட்டங்களின் பெரும்பான்மை பகுதிகளை இணைக்கும் வகையில், சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு உருவாக்கி வருகிறது.

இதில், இந்தியாவின் மிக நீளமான சாலையாக உருவாகி வரும் நாக்பூர்-மும்பை விரைவுச்சாலையை விட, நீளமான சாலையாக சுமார் 760 கிலோ மீட்டர் தூரத்திற்கு நாக்பூர்-கோவா சாலையை அமைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள 10 நெடுஞ்சாலைப் பணிகளையும்,அடுத்த 5 ஆண்டுக்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக மகராஷ்டிர அரசின் சாலை மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments