தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும், அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Comments