பிரிஸ்பேனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்ட முக்கிய கட்டடங்கள்

0 1702

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, முக்கிய கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை, காணாமல் போன நபர் குறித்து விசாரிக்கச்சென்ற போலீசார் மீது ஆயுதமேந்திய மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 2 காவலர்களும், அலன் டேர் என்ற நபரும் உயிரிழந்தனர். உடனடியாக அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரையும் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், பிரிஸ்பேனில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments