வேளாங்கண்ணியில் இரு தரப்பு மீனவர்கள் இடையே மோதல்.. 10பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.. 7 பேர் கைது!

0 1724

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மீனவ பஞ்சாயத்து கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு கேட்டதால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர்.

வேளாங்கண்ணி ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் பஞ்சாயத்து கணக்காளராக உள்ள சத்தியசீலனிடம் ஊர் முக்கியஸ்தர்கள் 2 ஆண்டுகளுக்கான வரவு, செலவு கணக்குகளை கேட்டுள்ளனர்.

அப்போது முன்னாள் மீனவ பஞ்சாயத்து தலைவர் நாகராஜ் மகன் ஆறுமுகம் மற்றும் சத்தியசீலன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் மோதி கொண்டதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக 7 பேரை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments