பனி உறைந்த ஏரிக்குள் விழுந்து பலியான சிறுவர்கள்.. காப்பாற்ற முயன்று உயிர்தியாகம் செய்த 10 வயது சிறுவனுக்கு ஹீரோ அந்தஸ்து!

0 1976

இங்கிலாந்தில் பனி உறைந்த ஏரிக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்கள் ஏரிக்குள் விழுந்து மூழ்கியபோது அவர்களை காப்பாற்ற முயன்று உயிரிழந்த 10 வயது சிறுவனுக்கு ஹீரோ அந்தஸ்து கிடைத்துள்ளது.

பர்மிங்ஹாம் அருகே சோலிஹல் என்னும் இடத்தில் உள்ள பாப்ஸ் மில்ஸ் ஏரியில்  சிறுவர்கள் சிலர் விளையாட சென்றுள்ளனர் அப்போது  உறைந்த பனிக்குள் தவறி விழுந்த 3 சிறாரை காப்பாற்ற 10 வயது நிறைந்த ஜாக்ஜான்சன் என்ற சிறுவன் துணிச்சலுடன் ஏரிக்குள் இறங்கியுள்ளான்.

இதில் அவன் உள்ளிட்ட 4 பேரும் மூழ்கினர். தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட நால்வரில் 3 பேர் பலியாகி விட்டனர்.6 வயதுடைய சிறுவன் தீவிர சிகிச்சையில் உள்ளான். 10 வயதில் தியாகத்தை வெளிக்காட்டி உயிரிழந்த ஜாக் ஜான்சனை அவனது உறவினர்கள் ஹீரோ என வர்ணிக்கின்றனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments