''ராஜீவ்காந்தி அறக்கட்டளை குறித்த கேள்வியை தவிர்க்கவே காங். எல்லைப் பிரச்சனை எழுப்புகிறது'' - அமித்ஷா குற்றச்சாட்டு
ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் வெளிநாட்டு நிதி பெறுவது தொடர்பான உரிமம் ரத்து குறித்து கேள்வியை தவிர்க்கவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எல்லை பிரச்சனையை எழுப்பியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், சீன தூதரகத்தில் இருந்து அந்த அறக்கட்டளைக்கு ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் நன்கொடை கிடைத்ததாகவும், அவை வெளிநாட்டு பங்களிப்பு சட்ட விதிகளின்படி இல்லாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டததாகவும் கூறினார்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட, யாராலும் கைப்பற்ற முடியாது என அமித்ஷா கூறினார்.
Comments