"ஆன்லைன் ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு; அதை விளையாட திறமை வேண்டும்" - சரத்குமார்
ஆன்லைன் ரம்மி என்பது அறிவுப்பூர்வமான விளையாட்டு என்றும், அதனை விளையாட திறமை வேண்டுமென்றும், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு மத்தியில், சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தான் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தபோது அவசர சட்டம் அமலில் இருந்திருந்தால், அதில் நடித்திருக்கவே மாட்டேன் என்றார்.
Comments