காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 4 பெண்கள்.. கோவில் தீப திருவிழாவிற்கு சென்ற போது நிகழ்ந்த விபரீதம்
உதகை அருகே கோவில் தீப விழாவிற்கு சென்ற 4 பெண்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீகூர் வன பகுதியில் உள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பூஜையில் பங்கேற்பதற்காக உதகை, கோத்தகிரி,எப்பநாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த ஏராளமானோர் சென்றனர்.
இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் வன பகுதியில் ஓடும் ஆனிக்கல் ஆற்றில் நேற்று மதியம் மலை பகுதியில் பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதனையடுத்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ஒவ்வொருவராக ஆற்றை கடக்க முயன்ற போது உதகை ஜக்கலொரை கிராமத்தை சார்ந்த 4 பெண்கள் எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
Comments