குண்டும் - குழியுமாக இருக்கும் சாலையை சீர்செய்ய கோரி.. தேங்கியிருந்த மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்

0 1637

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே குண்டும் - குழியுமாக இருக்கும் சாலையை சீர்செய்ய கோரி, மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கும் சாலையில், நாற்று நடும் போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டனர். 

மகாதேவி மங்கலம் கிராமத்திலிருந்து அல்லியந்தல், ரகுநாத சமுத்திரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் - குழியுமாக இருக்கும் நிலையில், தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளது.

சாலையை சரிசெய்ய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments