பயணிகள் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாக எழுந்த புகாரில்.. டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு

0 1654

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நேற்று பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அந்த விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நெரிசலை குறைக்க 4 அம்ச திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்கள் என்றும், தற்போது உள்ள வரிசையை 13லிருந்து 16 ஆக உயர்த்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், எக்ஸ்ரே ஸ்கேனிங் அமைப்பை மேம்படுத்துவதோடு, விமான நிலையத்திலுள்ள இடங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments