நாய்க் குட்டிகளை படம் எடுத்தபடி பாதுகாத்த நாகப் பாம்பு

0 7171

கடலூர் அருகே நாய்க்குட்டிகளை நாகப்பாம்பு பாதுகாத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சர்க்கரை என்பவர் வீட்டில் வளர்த்த நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்றது. நேற்று பிற்பகல் உணவு தேடி தாய் நாய் வெளியே சென்ற நிலையில், அங்கு வந்த நாகப்பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் அருகே படுத்து கொண்டது. பின்னர் யாரும் அருகே நாய் குட்டிகள் அருகே வராதபடிக்கு படமெடுத்து சீறிக் கொண்டு இருந்தது.

தாய் நாய் மீண்டும் வந்தபோது பாம்பை கண்டு அதிர்ந்து குலைத்தபடி அங்கிருந்து ஓடியது. இதனைக் கண்டு வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் பாம்பு பிடி வீரர் செல்லா பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments