திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்..!

0 2913

தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டையில், திருமணத்திற்கு சில மணி நேரம் முன் மணப்பெண் திருமண சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

எம்.சி.எ பட்டதாரியான ரவளிக்கும், மென் பொறியாளராக பணியாற்றும் சந்தோஷ் என்பவருக்கும், ஞாயிறு மதியம் திருமணம் நடைபெற இருந்தநிலையில், அதிகாலை 4 மணியளவில், மண்டபத்திலுள்ள ஒரு அறையில் ரவளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்குப்பின் வேலைக்கு செல்வது தொடர்பாகவும், குடும்ப சொத்தில் பங்கு பிரிப்பது தொடர்பாகவும் சந்தோஷ் மன உளைச்சல் ஏற்படுத்தியதால் மனமுடைந்த ரவளி தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தரப்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments