கொசோவோ அரசை கண்டித்து போலீஸ் வாகனங்கள் நுழைய முடியாதபடி பூர்வக்குடி செர்பியர்கள் போராட்டம்..!
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோ-வில், செர்பியர்கள் வசிக்கும் பகுதிக்குள் போலீசார் நுழைய முடியாதபடி, சாலையின் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அல்பேனியர்கள் பெரும்பான்மை வசிக்கும் கொசோவோ, 2008 ஆம் ஆண்டு செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதாக அறிவித்தது.
அங்கு பல தலைமுறைகளாக வசித்துவரும் செர்பியர்கள், அல்பேனியர்களுக்கு ஆதரவான கொசோவோ அரசின் சட்டங்களை கண்டித்து போராடி வருகின்றனர்.
காவல்துறை பணியை ராஜினாமா செய்த செர்பியர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டங்களின்போது, கொசோவோ போலீஸ் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது.
Comments