கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால்,பவானி சாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

0 1801

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், பவானி சாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

முதல் போக பாசனத்திற்காக வாய்க்கால் வழியாக, வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று கூரபாளையம் அருகே இருகரைகளிலும் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் புகுந்தது.

இந்நிலையில், உடைப்பை சரி செய்வதற்கு ஏதுவாக, அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் வடிந்த பிறகு, கரைகளை சீர் செய்யும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments