அமெரிக்காவின் வரி விதிப்பை ஏற்க உலக வர்த்தக அமைப்பு மறுப்பு
சீனா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி உயர்வை ஏற்க, உலக வர்த்தக அமைப்பு மறுத்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகுவிற்கு 25 சதவீத வரியும், அலுமினியத்திற்கு 10 சதவீத வரியும், தேசிய நலன் கருதி விதிக்கப்படுவதாக, 2018-ம் ஆண்டில் அமெரிக்க அரசு அறிவித்தது.
இதனை ஆராய்வதற்காக உலக வர்த்தக அமைப்பு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் இந்த அறிக்கையை, சீனா வரவேற்றுள்ளது.
Comments