கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் பீப்பாய் ஒன்றிற்கு 129 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து தற்போது 76 டாலர்களுக்கு விற்பனையாகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் நிலவிய நிச்சயமற்ற விநியோகத் தன்மை சீரடைந்து வருவதால் விலை குறைந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் 20 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதால், இந்தியாவில், பெட்ரோல் டீசல் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments