நாக்பூரில் புதிய மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்து, பயணித்த பிரதமர் மோடி..!
நாக்பூர் - பிலாஸ்புர் இடையிலான, நாட்டின் ஆறாவது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாக்பூரின் முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
சுமார் ஆறாயிரத்து 700 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி, ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை மெட்ரோ ரயிலில் பயணித்து, சக பயணிகளுடனும், மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, நாக்பூரில் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ள பிரதமர் மோடி, சந்திரபூரில் உள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
Comments