ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கோலாகலமாக நடைபெற்றது நோபல் பரிசு வழங்கும் விழா..!
நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்ப்ரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல் உள்ளிட்ட 12 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 10ந் தேதி நோபல் பரிசு வழங்கப்படும். கொரோனா தொற்றுப் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நோபல் பரிசுக்கான நேரடி விருது வழங்கும் விழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற விழாவில் மருத்துவம், வேதியியல், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஸ்வீடன் நாட்டு அரச குடும்பத்தினர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அமைதிக்கான நோபல் பரிசு விழா மட்டும் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்றது. பரிசு பெற்றவர்களுக்கு சான்றிதழ், நோபல் விருது, 9லட்சம் யூரோக்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
Comments