சட்டீஸ்கர் முதலமைச்சரின் துணை செயலாளர் சொத்து முடக்கம்..!
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் துணைச் செயலாளர் சவுமியா சவுராசியா, ஐஏஎஸ் அதிகாரியான சமீர் விஷ்னோய் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 152 கோடி ரூபாய் மதிப்புள்ள 91 வகையான சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கி உள்ளது.
சுரங்கங்களிலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளிடமிருந்து டன்னுக்கு 25 ரூபாய் வசூலித்ததன் மூலமாக பலகோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இவர்கள் மீது வருமான வரித்துறை 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
அதனடிப்படையில், அமலாக்கத்துறையினர் மற்றொரு வழக்குப்பதிவு செய்து அவர்களின் பினாமி பெயர்களில் இருந்த சுமார் 85 ஏக்கர் நிலம் உள்பட பல சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.
Comments