புயல் பாதிப்பு பகுதிகளில் படிப்படியாக மின்விநியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 1589

மழை குறைந்ததைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிகளில் மின்விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

மாண்டஸ் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் மின்விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நேற்று ஒரே நாளில் மட்டும் வரப்பெற்ற 26 ஆயிரத்து 251 மின்புகார் அழைப்புகளையும் சீரமைக்கும் பணிக்காக சென்னையில் ஆயிரத்து 100 பேரும், தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments