புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமைச்சர்

0 1542

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிருநாட்களில் நிவாரணம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  புயலால்  4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 205 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 9 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments