மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்து கணக்கிடப்பட்டு வருகிறது - முதலமைச்சர்
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையாக கணக்கிடப்படுவதாகவும், விரைவில் நிவாரணம் வழங்கப்படுமென்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர், காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை ஆய்வு செய்தார்.
பின்னர், பேட்டியளித்த முதலமைச்சர், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அரசு ஊழியர்களின் இடைவிடாத பணியால் மக்கள் காக்கப்பட்டுள்ளதாகவும், புயலால் பெரியளவில் சேதமடையவில்லை என்றும் கூறினார்.
Comments