6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்த 'மாண்டஸ்' புயல், இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கும், திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
நாளை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வரும் 13ஆம் தேதி வரை அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
வடதமிழகத்தில் அவ்வப்போது பலத்த தரைக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments