மாண்டஸ் புயல் பாதிப்புகளில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

0 1587

மாண்டஸ் புயல் பாதிப்புகளில் சிக்கி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 பேர் உயிரிழந்தனர்.

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரது கூரை வீடு புயலால் சேதமடைந்ததால், நேற்றிரவு அருகிலுள்ள பிளாட்டின் கார் பார்க்கிங்கில் தனது பிள்ளைகளுடன் உறங்கச் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த பொருளை எடுக்க வந்த லட்சுமியும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரனும் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில் புயலால் மரம் சாய்ந்து, அறுந்து விழுந்த மின் ஒயர்களை மிதித்த 2 வடமாநில தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர்.

இதே போல, சைதாப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுற்றுசுவர் இடிந்து அருகிலிருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்ததில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். துரைப்பாக்கத்தில் வேகமாக வீசிய காற்றில், கண்ணாடி கதவு இடித்து படுகாயமடைந்த ஐ.டி கம்பெனி ஊழியர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments