நாளை பூமிக்கு திரும்புகிறது ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம்
நிலவை ஆய்வு செய்ய கடந்த மாதம் விண்ணில் அனுப்பப்பட்ட ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நாளை பூமிக்கு திரும்புகிறது.
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த மாதம் 16-ம் தேதி ஆர்டெமிஸ் 1 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் நிலவை மிக அருகில் புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய நிலையில், திட்டத்தை முடித்துக்கொண்டு நாளை பூமிக்கு திரும்புகிறது.
Comments