ஸ்பெயினின் கடற்பகுதியில் வலையில் சிக்கிய திமிங்கலச் சுறாவை 4 மணி நேரம் போராடி விடுவித்த நீர்மூழ்கிக் குழுவினர்..!
ஸ்பெயினின் சியூட்டா கடற்பகுதியில் வலையில் சிக்கியிருந்த திமிங்கலச் சுறாவை நீர்மூழ்கிக் குழுவினர் விடுவித்தனர்.
ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு அருகே மீன்பிடி வலையில், அழிந்துவரும் இனமான மிகப்பெரிய திமிங்கல சுறா சிக்கியிருந்தது.
இதனைக் கண்ட நீர்மூழ்கிக் குழுவினர் 4 மணி நேரம் போராடி திமிங்கல சுறாவை வலையில் இருந்து மீட்டு கடலில் விடுவித்தனர்.
உலக வனஉயிரின நிதியத்தின்படி, திமிங்கல சுறாக்கள் தற்போது உயிருடன் உள்ள மிகப்பெரிய மீன் இனமாகும்.
Comments