மூன்றாவது குழந்தைக்காக மகப்பேறு விடுப்பு கிடைக்குமா..? 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
அரசு பணியில் சேருவதற்கு முன்பே இரண்டு குழந்தைகள் பெற்ற ஆசிரியைக்கு, மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை கதிஜா உமா, தனது மூன்றாவது பிரசவத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையின் போது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதற்காக அரசாணை உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு பணி சேர்வதற்கு முன்பாகவே 2 குழந்தைகள் பிறந்ததாகவும், பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது கருவுற்றதால் விடுப்பு பெற உரிமை உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments