மாண்டஸ் புயல் எதிரொலி : பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை..? - தமிழ்நாடு அரசு விளக்கம்
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி, பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார், குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், கேஸ் கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை அணைத்து வைக்கவேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இன்றிரவு புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும், நீர் நிலைகளின் அருகிலும், திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
புயல் மற்றும் கனமழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதையும், மொட்டை மாடிகளில் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Comments