மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்.. 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம்..!

0 1795
மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்.. 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம்..!

புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

மாண்டஸ் புயல் காரணமாக, புதுச்சேரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கரையைத் தாண்டி கடல் நீர் குடியிருப்பு பகுதிக்கு வந்ததால், மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகளின் சுற்று சுவர்கள் இடிந்து விழுந்தன.

முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments