வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை எதிரொலி, ஜப்பானில் 'குண்டுதாக்கா குடில்'களின் விற்பனை அதிகரிப்பு
ஜப்பான் வான்பரப்பு வழியாக கடந்த அக்டோபர் மாதம், வட கொரிய ஏவுகணை சீறிப்பாய்ந்ததன் எதிரொலியாக ஜப்பானில் குண்டுதாக்காத பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள குடில்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
வீட்டின் ஒரு பகுதியில் நிருவக்கூடிய, அறை வடிவிலான இந்த குடில் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. விஷ வாயு மற்றும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய இந்த குடிலால் நேரடி ஏவுகணை தாக்குதலை மட்டும் எதிர்கொள்ள இயலாது.
3 டன் எடையிலான இந்த குண்டுதாக்கா குடில் சுமார் 36 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments