ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின், முதல் முறையாக கொலையாளிக்கு பொது வெளியில் மரண தண்டனை

0 1976

ஆப்கனில் ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முறையாக பொது வெளியில் கொலையாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை பாதிக்கப்பட்டவரின் தந்தையே 3 முறை துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றினார் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்..தென் மேற்கு மாகாணமான பாராவில் உள்ள நெரிசலான மைதானம் ஒன்றில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை தாலிபான் அரசின் மூத்த அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர்.

முன்னதாக பாதிக்கப்பட்டவரின் தாயாரிடம் தாலிபான் தலைவர்கள், குற்றவாளியை மன்னிக்குமாறு கோரியதாகவும் ஆனால் இந்த தண்டனை பிறருக்கு பாடமாக அமைய வேண்டும் என்று கூறி தண்டனையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments