தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

0 1426

தென்கொரியாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஸ்டீல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சங்கங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர்களை பணிக்கு திரும்புமாறு தென்கொரிய துணை பிரதமர், சூ கியுங்-ஹோ (Choo Kyung-ho) உத்தரவிட்டுள்ளார்.

லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் 2 ஆயிரத்து 500 சிமெண்ட் லாரி ஓட்டுநர்களை பணிக்கு திரும்புமாறு தென் கொரிய அரசு உத்தரவிட்டிருந்தது.

தவறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, 3 ஆண்டுகள் சிறை, மற்றும் 22 ஆயிரத்து 550 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments